vendredi 6 mai 2011

மனிதர்களை அச்சுறுத்தும் கொலைகார மீன்..!

உலகத்தில் புலி, சிங்கம், வெள்ளைச்சுறா, முதலை போன்ற பிராணிகள் மனிதர்களைக் கொல்கிறவை என்ற கெட்டபெயரைப் பெற்றிருக்கின்றன. ஆனால், தென் அமெரிக்காவின் ஆறுகளிலும், ஏரிகளிலும் காணப்படும் `பிரானா’ என்ற சிறிய மீனைப் போல் பயங்கரமான ஆட்கொல்லி வேறு எதுவும் இல்லை. பார்ப்பதற்குச் சின்னதாக, சாதுவாகத் தோற்றமளித்தாலும், பிரானா, கொடூர குணமுள்ளது. அதன் உடம்புடன் ஒப்பிட்டால், தலை, அளவுக்கு மீறிப் பெரியதாயிருக்கும். அதற்கு வலுவான மண்டையோடு உள்ளது. அதன் கண்கள் பெரிதாகவும், சிவந்தும் காணப்படும். அதன் வாயில் முக்கோண வடிவில் பற்கள் உண்டு. கீழ்த்தாடை சற்று முன்னுக்கு வந்திருக்கும்.
வாயை மூடும்போது மேல்வரிசைப் பற்களுக்கு கீழ்வரிசைப் பற்கள் ஒட்டிப் பொருந்துகின்றன. அதனால் அவை எந்தப் பொருளையும் வெண்ணையைக் கத்தி வெட்டுவது போல வெட்டிவிடும். பிரானா என்ற பெயருக்கே `பல்லை ஆயுதமாகக் கொண்ட மீன்’ என்றுதான் அர்த்தம். அது கடித்தால், ஒரு ரூபாய் அளவுக்குச் சதை துண்டாக வந்துவிடும். அமேசான் நதிக்கரையில் வாழும் பல மீனவர்கள் தங்கள் விரல்களை பிரானாவிடம் இழந்திருக்கிறார்கள். பிரானா நூற்றுக்கணக்கில் கூட்டமாக வந்துதான் வேட்டையாடும். அவற்றின் அழிப்புத்திறன் பயங்கரமானது. ஒருமுறை நீரில் தவறி விழுந்துவிட்ட ஒரு குதிரையைச் சில நிமிஷங்களுக்குள் பிரானாக்கள் எலும்புக்கூடாக்கிவிட்டன. 1976-ம் ஆண்டில் உருபு என்ற ஆற்றில் ஒரு படகு கவிழ்ந்தபோது அதிலிருந்த 35 பயணிகளையும் பிரானாக்கள் தின்று தீர்த்தன.
ஆனால், விஞ்ஞானிகள் பிரானாக்களைப் பற்றிய பீதி அனாவசியமானது என்கிறார்கள். அமேசான் பள்ளத்தாக்கில் வசிக்கும் மக்கள் நதியில் அஞ்சாமல் குளிக்கிறார்கள். பிரானா அவர்களை அபூர்வமாகவே கடிக்கிறது. பிரானாக்கள் சாதாரணமாக மற்ற மீன்களை வேட்டையாடி வாழும். ஆனால், கோடைக் காலத்தில் நீர்நிலைகள் சுருங்கி உணவுத் தட்டுப்பாடு ஏற்படும்போது, நீரில் இறங்குகிற எதையும் அவை கடிக்கத் தொடங்குகின்றன. பிரானாக்களுக்குக் கண் பார்வையும், மோப்ப சக்தியும் கூர்மையானவை. தண்ணீரில் தோன்றும் அதிர்வுகளிலிருந்து அவை தமது இரையைக் கண்டுபிடிக்கின்றன. பிரானா மீன்கள் கொடூரமானவையாக இருந்தாலும் உண்பதற்கு ருசியானவை. சிவப்பிந்தியர்கள் ஒரு தாவர நஞ்சைத் தண்ணீரில் கலந்து பிரானாக்களை மயக்கமடையச் செய்து அவற்றைப் பிடிக்கிறார்கள். பிறகு அவற்றை நெருப்பில் சுட்டுத் தின்கிறார்கள்










பிரமிக்க வைக்கும் பெண்ணின் திறமை: அனைவரும் பார்க்க வேண்டிய வீடியோ!

பெண்கள் வீட்டுக்குள்ளையே முடங்கிக்கிடந்த காலம் மலையேறிப்போச்சு. இன்று ஆண்களை விட பெண்களே அதிகம் சாதனைகளை செய்ய துடித்துக்கொண்டிருக்கின்றனர். அப்படிப்பட்ட சாதிக்க துடிக்கும் பெண்மணிதான் இவரும். இவர் நிகழ்த்துவது பெரிய உலக சாதனை இல்லாவிட்டாலும் இது ஒரு மிகப்பெரிய திறமை என்றே சொல்ல வேண்டும். காரணம் அவர் செய்யும் அந்தக்கலையை வெகு இலகுவாக யாரும் செய்துவிட முடியாது. மேடையில் கொடுக்கப்படும் பின்னணி இசைக்கு அமைந்தால் போல் காட்சிகளை வரைந்து பார்வையாளர்களை வியக்கவைக்கும் இந்த பெண்ணின் திறமைக்கு சவால் விட யாரும் இல்லை எனலாம். சுவர் இன்றி தூரிகை இன்றி சித்திரம் வரையும் இந்த பெண்ணின் திறமைக்கு உங்கள் பதில் என்னவாக இருக்கும்?

மனிதர்களை அஞ்ச வைக்கும் ‘அஞ்சாலை’ மீனினம்..!

கடலுக்கு அடியில் செல்லும் மனிதர்களை அஞ்ச வைத்துவிரட்டும் ‘அஞ்சாலை’ மீனினம், விசித்திர தன்மைகளைக் கொண்டது. மன்னார் வளைகுடா பகுதியில் வாழும் உயிரினங்களுள் ஒன்று ‘அஞ்சாலை’ மீன், பவளப்பாறையின் இடுக்குகள், பொந்துகளில் மறைந்திருந்து வாழும் இவற்றை ஆராய்ச்சியாளர்களை தவிர மற்றவர்கள் பார்த்திருப்பது கடினம்தான். கடல் குச்சிகளை உண்டு வாழும் இவற்றின் குணம் விசித்திரமானதாகும். மீன் இனத்தைச் சேர்ந்தவை என்றாலும், மீன்களுக்குரிய செல்கள் இவற்றுக்கு இல்லை.

பாம்பின் தோற்றம் கொண்ட இவை 150 செ. மீ. நீளத்துடனும், கண் சிறியதாக இருக்கும் என்பதால் பார்வையும் குறைவாகவே இருக்கும். இரவில் மட்டுமே வெளியே வரும் இவை, வேட்டையாடி உண்ணும் வழக்கம் கொண்டவை. இந்திய பெருங்கடலில் 57 வகையும், மன்னார் வளைகுடாவில் ஆறு வகை அஞ்சாலையும் காணப்படுகின்றன.
மனிதனின் விரல்களைப் பார்த்தால் சதையை மட்டும் உறிஞ்சி உண்டுவிடும். இதனால் கடலுக்கடியில் வருபவர்கள் இவற்றை கண்டவுடன் தலைமறைவாகிவிடுவர். இவற்றை உணவாக யாரும் உட்கொள்வதில்லை. அலங்கார மீனுக்காக மட்டும் சிலரால் பிடிக்கப்படுகிறது.