mercredi 25 mai 2011

தேள்


தேள் (Scorpionகணுக்காலிகள் பிரிவைச் சேர்ந்த உயிரினமாகும். தேள்களில் கருந்தேள் உள்ளிட்ட பல வகைகள் உள்ளன. காடுகள்,புதர்கள், மறைவான பகுதிகளில் வாழ்கின்றன. இவை பூச்சிகளையும், பிற சிறிய உயிரினங்களையும் உண்டு வாழ்கின்றன.

உடலமைப்பு

இதன் உடல் கணுக்களால் ஆனது. இது ஆறு கால்களும், இரண்டு முன்பக்கக் கொடுக்குகளும் கொண்டிருக்கும். இதன் வால் கணுக்களாகவும், நுனியில் ஒரு நச்சுத்தன்மையுள்ள கூர்மையான கொடுக்கும் கொண்டிருக்கும். முன்பக்கக் கொடுக்குகள் இரையைக் கவ்விப் பிடிப்பதற்கும், பின்பக்கக் கொடுக்கு இரை அல்லது எதிரிகள் மீது நஞ்சைப் பாய்ச்சிக் கொல்வதற்கும் உதவுகின்றன.




பௌர்ணமி தினத்தில் தேள்களில் எவ்வாறு ஒளி வீசுகின்றது?

இருண்ட சூழ்நிலையில் தேள்களிலிருந்து புற ஊதாக் கதிர்வீச்சுகள் ஒளிர்ந்தால் பார்ப்பவரை திகிலடையச் செய்யும் என்பதில் சந்தேகமில்லை. பூரண பௌர்ணமி தினங்களில் இயற்கைக்கு மாறான வகையில் நியோன் நீல நிற கதிர்கள் தேள்களின் உடற்பாகங்களிலீருந்து ஒளிர்கின்றன. தேள்களின் எலும்புப் பகுதிகளில் புரதப் பொருளின் மீது புற ஊதாக் கதிர்கள் தாக்கமுறுவதனால் இவ்வாறு மனிதக் கண்களுக்கு அவை ஒளி வீசுவதாக் தோன்றுகின்றது. தேள்கள் தொடர்பான ஆய்வாளர்கள் இந்த வினாவிற்கு விடைகாண நீண்ட காலத்தை செலவிட்டனர்.
ஏனைய தேள்களை இனம் காண்பதற்கு இவ்வாறு ஒளிர்வதாக ஒரு சாராரும், பாலைவனங்களில் தேள்களை இனம் காண்பதற்கு இவ்வாறு ஒளிர்வதாக மற்றொரு சாராரும் தெரிவிக்கின்றனர். இரையை ஏமாற்றும் நோக்கில் இவ்வாறு ஒளிர்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சூரிய ஒளியிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக இந்த ஒளிமாற்றச் செயற்பாடு நிகழ்வதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது. எவ்வாறெனினும், தீவிர ஆய்வுகளின் போது மேற்குறிப்பட்ட எந்தவொரு காரணியையும் முழுமையாக ஏற்றுக்கொள்ளக் கூடிய அளவிற்கு போதிய ஆதாரங்கள் கிடைக்கப்பெறவில்லை.
தேள்கள் எவ்வாறு ஒளிர்கின்றன என்பது தொடர்பில் கலிபோர்னிய பல்கலைக்கழக கார்ல் குலுக் தலைமையிலான குழுவினர் ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். தேள்கள் இரவு நேரப் பிராணிகளாக வர்ணிக்கப்படுகின்றன. தேள்கள் வெப்பத்தையும், சூரிய ஒளியினால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களையும் விரும்புவதில்லை. புற உதாக் கதிர் தாக்கத்தை தேள்கள் தவிர்த்துக் கொள்கின்றன. தேள்களின் மீது புற ஊதாக் கதிர்கள் விழும் அளவிற்கு ஏற்ப அவற்றின் செயற்பாடுகளில் மாற்றம் ஏற்படுவதாக அண்மைய ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. புற ஊதாக் கதிர் வீச்சு அதிகமாகக் காணப்படும் போது தேள்களின் செயற்பாடுகள் குறைவாகக் காணப்படுகின்றது.
பூரண பௌர்ணமி தினங்களில் புற ஊதாக் கதிர் தாக்கம் அதிகமாகக் காணப்பட்ட போதிலும் இரை தேடுவதற்காக தேள்கள் வெளியே வருவதாகவும் இதனால் அவை ஒளிர்வதாகவும் கார்ல் குலுக் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும், பூரண பௌர்ணமி தினங்களில் தேள்கள் வெளியே செல்வதற்கு அதிக நாட்டம் காட்டுவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பான விரிவான ஆய்வுகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படு;ம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.எவ்வாறெனினும், பௌர்ணமி தினங்களில் தேள்கள் எவ்வாறு ஒளிர்கின்றன என்ற கேள்விக்கு பதில் கிடைக்கப் பெற்றுள்ளது. கொடிய விஷமுடைய தேள்கள் இரவு நேரங்களில் ஒளிர்க் கதிர்களை வீசிக் கொண்டு வீடுகளில் நகர்ந்தால் இலகுவில் அவற்றை தாக்க முடியும் என்பது மனிதர்களைப் பொருத்தமட்டில் ஓர் ஆசுவாசமாகவே கருதப்படுகின்றது.

வாழ்க்கைமுறை

பெண்தேளின் முதுகில் வெண்மையான நிறத்தில் தேள் குஞ்சுகள்
தேள்கள் பிறந்தவுடன் குறிப்பிட்ட பருவத்தை எட்டும் வரை தாயின் முதுகில் வைத்துப் பராமரிக்கப்படுகின்றன. தேள்களின் ஆயுட்காலம் 4 முதல் 25 ஆண்டுகள் ஆகும்.